உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

இவற்றையெல்லாம் திரும்பவும் கான சந்திரா வின் பேதை உள்ளம் எங்ஙனம் சகிக்கப் போகிறது ? அவளுக்கு எப்படி ஆறுதல் கூறமுடியும் ...’

மணிக்கூண்டிலிருந்து ஒலிபரப்பி எழும்பிய மணிச் சத்தம் அவர் காதில் உன்னிப்பாகக் கேட்டது. பாதிச் சாமம்; மணி பன்னிரண்டு. எண்ணத் தொலையாத சஞ்சலத்தின் வாயிலில், எரிமலையின் திக் குழம்பாக உருகி கின்ற அவருக்கு எப்படி உறக்கம் வரமுடியும் ?

இருளும் ஒளியும் பிணைந்திருந்த அறையின் ஜன் னல் திரையை விலக்கினர், கூப்பிடு தொலைவில் ஒடிக் கொண்டிருந்த காவிரி நதியின் காட்சியை ஒருமுறை தன் மனக் கண்முன் கொணர்ந்தார். வா வா என்று அபயமளிக்க அது வரவேற்பதுபோல் ஓர் உள்ளு ணைர்வு எழுந்தது.

சக்திராவின் கிழற்படத்தைக் கடைசி முறையாகப் பார்க்க ஆவல் குருத்துவிட்டது.அடியெடுத்து வைத்து ‘மின்விசையை அழுத்தினர், ரங்களுதன். . .”

- நீர்மல்கிய கண்களுடன் சந்திராவைப் பார்த்தார். அந்த கிமிஷம் அவரது மனத்தில் மின்னல் போன்ற ஓர் ஒளி-எண்ணக் கதிர் பளிச்சிட்டது. ஒரு தடவை: இரண்டு தடவை-இப்படிப் பலமுறை அதே கேள் வியைத் தன்னுள்ளே கேட்டுப் பார்த்தார். அவர் மனம் சிரிக்கத் தொடங்கியது.

புத்திர சோகத்தினுல் அனலில் புழுவாய்த் துடித் துக்கொண்டிருக்கும் சந்திராவிடம் சென்று ஆறுதல் சொல்வதைவிட்டு, தற்கொலை செய்து கொள்ளத் திட்ட மிட்டது எவ்வளவு மதியினம் என்பதை அவர் உணர :லானுர்.