உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

எள்ளி நகையாடிச் சித்திரவதை செய்து விட்டது. கல்ல வேளை, தப்பினேன் சிசுவைச் சிதைத்துவிட வில்லை. என் மனச்சாட்சி என்னை இன்னமும் பிய்த்துத் தின் கிறது, நேற்று நான் செய்யவிருந்த தவற்றுக்காக ! என் கருவும் பிழைத்தது. நான் பிழைத்தேன் ! நான் இப்போது தாய்மை பெற்றவள் ! தாயாகப் போகிறேன். குவா குவா மொழி பேசிக் குதுகலிக்கச் செய்யப் போகும் இன்னமுதம் என்னே அம்மா ஸ்தானத்தில் வைக்கப்போகிறது. நீங்கள் அப்பா வாகும் வாய்ப்பு அண்மையில் கிற்கிறது !...அந்த மருந்தை வீசி யெறி யுங்கள். எனக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் இன்ப நினைவு ஒன்றிலேயே நான் சகலவேதனைகளையும் துச்சமாக மதிப்பேன். நான் தாய்! பெண்மையின் உருவில் உருப்பெற்ற தாய்மை வளரப்பெற்ற தாய்...” சந்திராவா இப்படி வீறு கொண்டு பேசினுள் ? தாய் மைப் பாசம் கற்பித்த துணிச்சலா, பந்தமா, கனவா?

தம்பதிகள் வடித்த கண்ணிர் முத்துச்சரம் தொடுத் துக் கன்னங்கள் வழியே வாய்க்கால் வகுத்து ஒடிக் கொண்டிருந்தது. o

x X

சந்திராவும், ரங்களுதனும் போட்டி போட்டுக் கொண்டு நீலாம்பரியில்தாலாட்டுப் பாடி, தங்கள் முதற் குழந்தையைத் தங்கத் தொட்டிலில் இட்டுத் தூங்க வைத்துக் கொண்டிருந்தார்கள்