இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மாலோஹின்
ஊரடங்கும் வேளை. ஆனல், அந்த ஒர் உள்ளம் மட்டிலும் உறக்கம் பிடிக்காமல் படுக்கையில் சாய்ந்த படியே சூன்ய வெளியை வெறித்து நோக்கியவாறு கிடந்தது. புகைச்சல் இருமலின் உபாதை தாளாமல் உயிர்போய் உயிர் வந்துகொண்டிருந்தது. படுக்கை கொள்ளாமல் எழுந்து அமர்ந்தார். அவர் பிறகு மெது வாக எழுந்து, கல்யாண மண்டபத்தையும் உள்கடை யையும் கடந்து சென்று பெரிய அலமாரியை அடைக்
தார். அதில் புகைப்படம் ஒன்று காட்சியளித்தது. இமை வலிக்க, விழிகள் கோக, அவர் அதையே வைத்த கண் வாங்காமல் நோக்கினர். தலையை உயர்த்திய போது விலையுயர்ந்த அழகிய பொருள்கள் சில, வரிசையாகக் கொலு வீற்றிருந்ததைக் கண்டார்