உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ft)

விழுந்துப்பிட்டாகளாம்!...மஞ்சப்பத்து போடுறதுக்கு கொடுத்து வச்சிருக்குது. வழியிலே போன ஆளுங்க அவரைக் காப்பாத்தி வெளியேத்தித் துக்கிக்கிட்டு வந்து வீட்டிலே போட்டிருக்காங்க : இன்னம் பேச்சு இல்லை..ஆமா. உங்களுக்குத் தெரியாதா?...நீங்க போய்ப் பார்க்க வேணுமா, தம்பி?’ என்று விவரம் சொன்னுர். -

சிவசாமி ‘ம்’ என்று பெருமூச்சைப் பிரித்தான். அங்கிருந்து விரைவு பாய்ச்சிச் சென்று மறைந்தான்.

பெரியப்பாவுக்கு மேலுக்கு முடியலையாம். சொல்லு ஆத்தா!’ என்று வேண்டினன் மாணிக்கம். ப-ட-ம் எழுத்துக்கள் சிலேட்டுப் பலகையில் அழிந்திருந்தன.

“ஆமா, ஆமா...’


இயனர் குதிரையையே இமை வலிக்க, நெஞ்சு வலிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான் சிவசாமி. அவனுடைய விழிகளிலே ஆத்திரம் பொங்கியது. -

தோளுக்கு மேல் தோழன் என்ற அளவுக்குப் பெரிய சாமியும், சிவசாமியும் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தான், குப்புலிங்கம் சேர்வை கண்களை மூடினர். கடன் கட்டி போக,சேந்தங்குடி ஜமீன் கிணற்றுத் தொங்கலில் இருந்த இரண்டு சோளக் கொல்லே அவர்கள் இருவருக் கும் மிஞ்சின. பெரியசாமியின் பொறுப்பில் இவை இருந்தன; அண்ணனும், தம்பியும் உழைத்தனர். சாண் வயிற்றைக் கழுவி மூடவே பிரம்மப் பிரயத்தன மாக இருந்த து. இதற்கிடையில், பெரியசாமி ணத்துப் பக்கம் போய்ச் சாயாக்கடை வைத்து மூன்று வருஷங்களே ஒடவிட்டு ஊருக்கு ஓடிவந்தபோது,