உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

“பச்சை ஆச்சி தந்திட்டுப் போன ரவிக்கைக்குப் பொத்தான் தைக்க ஆரம்பி. இந்தா, பொத்தான் எட்டு!”

ஆகட்டுங்க!”

“அது முடிஞ்சதும், இந்தக் கொட்டடிப் பாவா டைக்கு நாடா போட்டுக் கைத் தையலாவே தைச்சிப் பிடு, தம்பி!!

சேரிங்க!':

பாவாடை ஆறு பாட்டம் அகலம், கடாவை டேப்பிலே கணக்கா அளந்து நறுக்கிக்க ராமையா!’

ஒ!” ‘ஓ’ என்ற இனக்கக் குறிப்புடன் கொட்டாவியும் உறவாடி விளையாடியது. .

‘ஏ, சாயாவைக் குவளையிலே ஊத்திக்கொடு ; சொச்சத்தை நீ குடி ; குந்தினவன் எழுந்திருக்கையிலே இன்னிக்கு வந்த புது ஆர்டரைபெல்லாம் சாடாவா முடிச்சிப்பிட்டிருக்க வேணும் !’

கல்லதுங்க!” . * . . சோடாப் போத்தல் சாயா'வை இழந்த வருத்தத் தில் கள்ளிப் பெட்டிக்கு அடியில் பதுங்கிக்கொண்டது. தையல் இயந்திரம் சுறுசுறுப்புடன் இயங்கியது. மிதி பலகையில் பாதங்கள் அழுந்தின. இரட்டைத் தடமாக ஓட முனைந்த ஊசியைச் செம்மைப்படுத்தி ஜாக்கெட் துணியையும் சமன் செய்தான் காசி,

ஊர் காக்கும் காளி கோயிலில் இரவுப் பூசனை நடக் தது ஆலய மணி அந்தத் தையற்கூடத்தில் வந்து மோதியது. .

ராமையா நான் முன்னடி போய்ச் சாப்பிட்டுப்