உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

குப் பாதி சாமத்திலேயிருந்து இடுப்புவலி ரொம்பக் கூடுதலாயிருக்கு நாவிதச்சிகூடப் பயப்படுரு; ஆன. தாலே, அறந்தாங்கிக்கு ஒடிப் போய் டாக்டர் ஐயாவை அழைச்சுக்கினு வந்திடு, காசி என்றார் தெரிந்தவர்; அவ்வளவுதான் ஒட்டுதல், ஏன் அவர் கண்களில் கண்ணிர் மல்கவேண்டும் ? என்னுேட காமாட்சிக்கு ஜாஸ்தியாத்தான் இருக்கும் போலிருக்குது ஐயையோ விட்டுக்குள் அடியெடுத்து வைத்த தருணத்திலே, “ஐயோ, அம்மா!’ என்ற தன் மனையாட்டியின் அபயக் குரல் அவன் கெஞ்சத்தில் எதிரொலித்தது. அதைத் தொடர்ந்து, “சுருக்க ஓடிப் போய் அறந்தாங்கி டாக் டரைப் கூட்டியாப்பா !” என்ற எச்சரிக்கைத் தொனி களும் ஒலித்தன. ஆறு மைல் தொலைவில் இருந்த பெரிய டாக்டர் மனக்கண்ணில் தோன்றினர். அவர் மிகவும் கெடுபிடிக்காரர் ; பண விஷயத்தில் கருர்ப் பேர்வழி. பெரியவரைக் கலந்து ஆலோசித்தான். “ஆமாம், தம்பி! நூத்தைம்பது ருபாயாச்சும் கொடுத் தாத்தான் அவர் கிளம்புவார். இது ஊரறிந்த சேதியாச் சே ?’ என்று கூறினர் அவர்.

டிரங்குப் பெட்டி திறந்தது; மூடிக்கொண்டது; பதினொரு ஒரு ரூபாய்கோட்டுக்கள் சிதறின. டாக்டரை இட்டுக்கிட்டு வரப் பணத்துக்கு எங்கே போவேன் :காசியின் உயிர் அழுதது ; அலேக்கழிந்தது. கடையில் இருந்த தையல் இயந்திரம் உருக்காட்டிற்று. பள்ளத். து.ாரிலிருந்து அவன் கூடவே வந்தது, அந்த இயக் திரம். புது மாப்பிள்ளைக் கோலம் மாருமலிருந்த அவனுக்கு அதுவே வாழ்வும் வளப்பமும் தந்தது. இரண்டாங்கை மாறி வாங்கினதே நூற்றைம்பது ரூபாய்தானே ? இதை விற்றாலும் நூறு ரூபாய் கூடத் தேருதே அடகு வைச்சா யார் இதை நம்பிப் பணம்