உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

கைகூப்பி வழி யனுப்பி வைத்த காசியின்செவிகளில் ஊராரின் மேற்கண்ட பேச்சு எதிரொலி பரப்பியவாறு இருந்தது. . .

அப்பொழுது பத்து நாழிகைப் பொழுதிருக்கும். காசிக்கு உடம்பு முழுவதும் அடித்துப் போட்ட மாதிரி இருந்தது. பக்கத்து வீட்டுக்காரப் பெரியம்மா இட்டிலி கொணர்ந்தாள். பல்லைத் தேய்ச்சுப்பிட்டு வந்து சாப்பிடு, தம்பி!’ என்று கூறிஞள்.

அவன் அசையாமல் இருந்தான். விழி வெள்ளம் சிந்தியது. .

ஏன் தம்பி இப்படி அழுகிறே? அதுதான் தாயும் பிள்ளையும் பிழைச்சுட்டாங்களே!”

இவ்வளவு நாட்களாகக் காப்பாத்தி வச்சிருந்த என்ளுேட நாணயம் காற்றிலே பறந்திடுச்சே! என்ன இனி யார் நம்பப் போருங்க ? நான் பாவி!-உள்ளம் அழுதால், கண்களும் அழத்தானே செய்யும்:

சிறுவன் ராமையா ஆயில்கானே கழுவ விட்டான். அது சத்தம் விளைத்தது. அந்தச் சத்தத்தில் காசியின் மனம் விழித்தது. டேய், தோசிப் பயலே! வேலை மேலே கண் வைச்சுப் பாரடா!’ என்று இரைந்தான். காசியின் காய்ந்த விரல்கள் பால் முகத்தைப் பதம் பார்த்து விட்டன. . . . கோவிச்சுக்கிடாதீங்க, அண் ணு ச்சி. நீங்க துணியை வெட்டிப் போடுங்க. நான் தைக்கிறேன். அப்பாலே நீங்க கொஞ்ச நேரம் துரங்கி முழிச்சதும்,

காசியின் விழி நீரில் ராமையா நகை புரிந்தான்.