85
வீட்டுத் துணிகளைத் தைச்சுக் கொண்டு போய்க் கொடுக்க வேணுமே இயந்திரத்தில் அவனுடைய ஜீவன் இணைந்தது. ஆமாம் ; அதுதான் வழி. பொழுது பட்டதும் கங்காணி ஐயா வீடு தேடிப்போய், வீட்டு கிலவரத்தைச் சொல்லி, இந்தத் தையல் மிஷினை அவர் கிட்டே அடகு வைச்சு, பணம் நூற்றைம்பது எப்படி யும் கேட்டு வாங்கி, அதை வேலாயுதஞ் செட்டியார் கையிலே கொடுத்து, கங்காணி வீட்டுத் துணிமணி களைத் திருப்பியாக்து, கங்காணி வீட்டிலேயே உட்கார்ந்து எல்லாத்தையும் ராத்திரியோடே ராத்திரியா முடுச்சுக் கொடுத்துப்பிடணும். அப்பத்தான் என் நாணயமும் மானமும் பிழைக்கும்.’
X X
பொழுது பட்டது. சிறுவன் ராமையாவை விட் டுக்கு அனுப்பி விட்டு, சந்தடி இல்லாத பகுதிகளில் மறுகி மறுகி வழி கடந்தான் காசி. தலையில் சுமந்து சென்ற தையல் இயந்திரத்தின் பாரத்தைத் துளியளவு கூட அவன் உணரவில்லை. தன் தவற்றுக்குப்பிராயச் சித்தம் தேடிக்கொள்ளப் போகும் நினைவுதான் அவனுக்கு ஓர் அமைதியாகத் தோன்றியது. குப்பான் ஊருணி, காளி கோவில், சாம்பான் தோட்டம் ஆகியவை விலகி வழி விட்டன. ஆயிங்குடியின் முகப்பில் இருந்த அந்தப் பெரிய மாடிவீடு தென்பட்டது. காசியின் உடல் தன் போக்கில் ஆடியது. சுற்று வேலியை அணைத்திருந்த கதவைத் திறந்து உள்ளே அடியெடுத்து வைத்தான் அவன். இருட் செறிவில் மாட்டுத் தொழுவம் தட்டுப் பட மறுத்தது. பாதத்தில் ஏறிய நெருஞ்சி முள் கூட அவனுக்கு ஒரு பொருட் டெனத் தோன்றவில்லை. . -
வி-6 . . . -