7.
ஒருநாள் விளக்குகள் பொருத்தப்பட்ட வேளை. அபாயச் சங்கு எதுவும் ஒலிக்காததைக் கண்டு, சொந்த ஊர்க்காரரைக் கண்டு பேசிவரப் புறப்பட்டார் காச்சியப்பன். இருட்டடிப்பானதால், அவரிடம் இருந்த கை விளக்கு கை கொடுத்தது, உதட்டுச் சுருட்டு உடம்புக்குச் சற்றே தென்பு அளித்தது. ஆனல் அடுத்திருந்த பூடாலான் -ஸ்டேஷன் ரோட்டில் அவர் மறுகி மடங்கிய தருணத்திலே திடுதிப்பென்று வானம் மின்னிப் பளிச்சிட்டது. அண்டம் அதிர்ந்த வண்ணம் வெடிகுண்டுகள் சிந்திச் சிதறின. மீஞ்சான் ககரமே நூலிழையில் உயிருக்கு மன்றாடும் போது, பாவம் அந்த மனிதர் நாச்சியப்பன் உயிர் ஒடுங்கி, உள்ளம் குலைந்து கின்றதில் வியப்பேதும் இல்லைதானே ! இமை மூடி இமை திறக்கும் போதுக்குக்கூட இடைவெளி அமையவில்லை; குண்டு வீச்சு வலுத்தது. கை விளக்கைப் பயன்படுத்தினர்; அவர் பார்வையில் கூப்பிடு துரத்தில் இருந்த ஒரு வீடு தென்பட்டது. தேக்குமர வீடு அது. விழுந்தடித்து ஓடினர் அவர் ;. மரண பயம் அவரின் பிடரியை கெட்டித் தள்ளியது. ஒடிய வேகத்தில் அவர் கதவை உதைத்துக் கொண்டு உள்ளே சாடி வீழ்ந்தார். வீழ்ந்த அவர் எழுந்து - கின்றார் ; உடல் நடுக்கம் எப்படி ஒய்வு பெறும் வழிந்த நீரை வழித்துவிடத் தோன்றாமல், பதுமையென நின்று
பயம் கப்பிய முகத்துடன் தேம் ய அந்தப்
பெண்ணைப் பார்வையிட்டார் நாச்சியப்பன்.
இந்த அடைக்கலம் கிடைக்கவில்லையெ
மண்ணுகிப் போயிருப்பேன்! என்று நா கூறினர் நாச்சியப்பன். -