91
களும் குமாரி தமிழரசியை அறிந்திருந்தார்கள். அவள் பெயருக்கு அவ்வளவு வல்லமையோ...?
பிறை; மண்ணில் பிறை மதியாள் : பிறைகுடிய பொம்மானின் பக்தை அவள். தூப தீபா ராதனை கடந்தது. கிருத்தம் முத்திரை காட்டும் ஞான யோக அம்சம் அவளுள் உருவானது. சிட்டிகைப் பொழுது. ஆடித் திளைத்த உலக நாயகனின் திருச் சிற்றம்பலம் அப்பொழுது அங்கே உருவானது. * தமிழச்சிமனையில் பக்திப் பெருக்கு வழிந்தது. தமிழர சியின் நெருஞ்சத்தில் பூம்புனல் வெள்ளம் புதுப் பெருக் குடன் ஒடியது.
கரை திரண்ட மாது ஒருத்தி அவள் நெற்றியில் விபூதி பூசினுள்.
‘ஈஸ்வரா!...”
தமிழரசியின் அழைப்பில் உலகாளும் தெய்வம் தோன்றவில்லை; அதற்குப் பதிலாக, பிச்சைக்காரிக் கோலத்தில் வாலைக்குமரி ஒருத்தி தரிசனம் தந்தாள். கிழிந்த பாவாடை , கந்தல் தாவணி ; உடலைப் பிடித்து விட்டிருந்த சீட்டி ரவிக்கைத் துணி; ஏழை மைக் கோலம்; இயற்கையின் மாறிச் சுழலும் சக்கரமும், எழுதிச் செல்லும் விதியின் கையும் சேர்ந்து மாயனர் குயவன் செய்த அந்த உயிர்ப் பாண்டத்தை எதுவும் செய்துவிட் முடியவில்லை ; உடலிலே உயிர் ஒட்டியிருந்ததைப் போலவே, அழகும் தேங்கியிருந்தது. கருத்தழிக்கும் உடல்வாளிப்பு ; கருத்தைக் கவர்க் திழுக்கும் கள்ளங்கவடு இல்லாக் கண்புலம். அவள் வாலைக்குமரி ; பிச்சை போடுபவர்களுக்குப் புண் னியம் சேர்த்துக் கொடுத்தவள். . .