இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
92
- அவள்...!’ சுடுநீர் சரம் தொடுத்துக்கொண்டே இருந்தது. தமிழரசிக்குச் சுய நினைவு தடம் புரண்டிருந்த நேரங்கெட்ட நேரம்; மாறிப் புக்கு இதயம் சேர்ந்த வே8ள ; மனத்தைக் காட்டி மனச் சான்றைப் பேசு மாறு சொடுக்கிய இக்கட்டான பொழுது ; காற்பெரு விரல்களில் ஈரம் இருக்கக் கண்டாள்; குனிந்தாள் ; சரிந்து விழத் துடித்த கைலான்’ பட்டுடை முன்றா அனயைச் சீர் செய்து கொண்டாள். கடந்தாள் ; கடை பயிலும் அன்னத்துக்குப் போட்டியோ...? அவளது முழு உருவத்தையும் பிரதிபலித்துக் காட்டவேண்டு மென்று ஆர்டர் கொடுத்துச் செய்து வாங்கியது போன்ற நிலைக்கண்ணுடி, முன் வந்து தலை வணங் கியது; விழுந்த பிரதிபிம்பத்தின் பூரணச் சந்திர வதனத்தில் சஞ்சலம் பேசியது ; அர்த்த சந்திர வடிவு கொண்ட நுதலில் பெருமூச்சின் ஒலி முட்டி கின்றது.
காலம் ஒரு கைக்குழந்தை; நினைத்தபோது சிரிப் புக் காட்டும்; வேண்டாத வேளையில் அழுகை பூட்டும் ! -
அந்தக் காலம் வாழவேண்டும்! ஏன், புரிகிறதா...? குமாரி தமிழரசியும் வாழ்கின்றாள் !
தமிழ் நாட்டின் ஹாலிவுட் வழி கூட்டி அனுப்பி வைத்த அந்த பிளிமத் தமிழரசியை வாழ்த்தி பங்களாவிற்குள் சேர்த்த பிறகு ஒய்வறையில் முடங் கியது. சிறு பொழுதுக்கு நிம்மதி. மறுபடி அவள் படப்பிடிப்புக்குப் பறந்தோடவேண்டும். ஒப்பனை’ கலையாத பொய் வேடத்துடன் அவள் மாடிக்கு