பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 - விளையாட்டு அமுதம் செய்யமுடியும். அரைகுறையாகப் புரிந்துகொண்டு செய்யத் தொடங்கில்ை, அரைக் கிணறு தாண்டி யவன் கதையாகத்தான் முடியும். அரை கிணறு தாண்டிவிட்டு, கிணற்றுக்குள் விழுந்து அங்கே கின்ற வாறு, எப்படித் தாண்டிக் குதித்திருக்கிறேன் பார்த்தீர் களா? என்று யாராவது கூறினல் நீங்கள் என்ன நிஜனப்பீர்கள்! இந்திய நாட்டின் சார்பாக விளையாடப் போவதற் காக, சிறந்த 48 வீரர்களை வளைகோல் பந்தாட்டத் திற்காகத் (Hockey) தேர்ந்தெடுத்துப் பயிற்சி முகாமுக்கு அழைத்திருக்கிருர்கள். அவர்களிலே பலருக்கு, வளைகோல் பந்தாட்டம் பற்றிய அடிப்படை விதிகளே சரியாகத் தெரியவில்லை. அவர்களுக்கு முழு மையாக விதிகளைப் பற்றிய பாடங்களை நடத்தப் போகிருேம் என்று பயிற்சியாளர் R. S. ஜென்டில் அவர்கள் கூறியிருக்கிருர்கள். கேட்க வருத்தமாகத் தான் இருக்கிறது. நாட்டின் சார்பாக ஆடப்போகிற நேரத்தில், திருத்தவேண்டிய நிலையில் இருக்கிருேமோ என்று கினைக்கும்போது வருத்தமாகத்தான் இருக் கிறது. மாணவர்கள் பள்ளிகளில் படிக்கும்போதே அவர் களுக்கு வி2ளயாட்டுக்களின் விதிகளைத் தெளிவாகக் கற்றுக் கொடுத்தால், விதி புரியும்போதே, விளை யாட்டுத் திறன்களிலும் சிறப்பாகத் தேர்ந்து கொள்ள லாம் அல்லவா! வெற்றி மேடையில் இருந்த காலங்களில் நமக்கு இந்த விவரம் புரியாமல் போயிற்று. இறங்கியிருக்கும் கி2லயிலாவது புரிந்து கொண்டோமே! தவறைத்