பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். நவராஜ் செல்லையா 53. வண்ணச் சீருடை வந்தது எப்படி? கால் பந்தாட்டம் என்று அழைத்து நாம் இப்போது ஆடுகின்ற ஆட்டம், 500 ஆண்டுகளுக்கு முன்னே இத்தாலிய நாட்டில் கால்சியோ எனும் பெயரி, ஆடப்பட்டு வந்தது. கால்சியோ எனும் இத்தாலிய மொழிச்சொல்லுக்கு 'உதை' என்பது பொருள். பந்தை உதைப்பதால் இதற்கு கால்சியோ (Calcio) என்று பெயர் வந்தது. போலும். ஆரம்ப காலத்தில், பிரபுக்கள் குடும்பத்தினரே அதிக ஆர்வம் நிறைந்த ஆட்டக்காரர்களாக விளங்கி யிருக்கின்ருர்கள். எஜமானர்கள் ஆடும்போது, ஏவலாளர்களாகிய வேலைக்காரர்கள், பேசாமல்பார் த்துக் கொண்டு இருக்கமுடியுமா? பிரபுக்கள் அடங்கிய குழு ஒரு பக்கம் இருந்து பந்தை உதைத்தாடும்போது, எதிரே உள்ள குழுவினர். யாராக இருக்கமுடியும்? என்று நினைக்கிறீர்கள்! அவர்களது வேலைக்காரர்களாகத் தான் இருக்க முடியும். அதல்ை, பிரபுக்களின் குழு ஒருபக்கமும், வேலைக் காரர்கள் குழு இருந்து இன்னெருபக்கமுமாக கால்சியோ விளையாட்டை ஆடினர்கள். பந்தை உதைக்கும் வேகத்திலும் ஆர்வத்திலும், தன் குழு பாங்கரை எப்படிக் கண்டுபிடிப்பது என்று