பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். நவராஜ் செல்லையா 55 அப்படி ஒருவர் அகம்பாவமாகப் பேசி அகப்பட்டுக் கொண்டார்! அவர் யார் என்றுகி2ன்க்கிறீர்கள்?ஸ்காட் லாந்து நாட்டை (1488-1573 வரை) ஆண்ட மன்னன் நான்காம் ஜேம்ஸ்தான். கோல்ஃப் என்ருெரு ஆட்டம். அதை ஆடுவது கூடாது என்பது அரண்மனையிலிருந்து வந்த அடக்கு முறைச் சட்டம். மீறி ஆடுவோருக்கு அபராதம் மட்டு மல்ல-சிறைத் தண்டனையும் உண்டு. ஆடப் பயந்தவர்களால் ஆட்டம் ஆடாது. ஒழிந்தது. என்ருலும் அரசனை அணுகிப் பேசும் பெருந் தனக்காரர்களும் பிரபுக்களும் ஆட்டத்தை மறக்க வில்லை. எப்படியாவது சட்டத்தை மாற்றிவிடி வேண்டும் என்று முயன்றனர். மன்னன் ஜேம்சிடம் பலமுறை விண்ணப்பித்தனர். வேண்டுகோள் விடுத்தனர். மனம் மாறி சட்டத்தை மாற்றித் தரக் கோரினர். விண்ணப்பம் வரும்போ டு தல்லாம் மன்னன் அலட்சியமாகச் சிரித்தான். கம்பால் அடித்து விரட்டுவது ஒரு ஆட்டமா? அதை வேண்டுமென்று கேட்க ஒரு கூட்டமா? அதற்கு ஒரு திறமையா? பெருமையா? இது ஒரு விளையாட்டுட இதற்கு பல பேர் வக்காலத்து என்றும் கேலி பேசின்ை. - ஒரு முறை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்!" என்று தயவாகக் கேட்டனர் பிரபுக்கள். மன்னனும் மனமிரங்கி ஒத்துக் கொண்டான்.