58 விளையாட்டு அமுதம் ஒலிம்பிக் கழகம் முயன்றது. போதிய பொருளாதார வசதியில்லாததால், திணறிக் கொண்டிருந்தது. ஏற்கெனவே இந்தியா வென்றிருந்ததால் (1923), மீண்டும் வெற்றிபெற வேண்டும் என்று விரும்பியது. நிதியில்லாதபோது கலந்துகொள்ள வேண்டாம் என்று பலர் அறிவுரை கூறினர். எப்படியும் கலந்துகொள்வது என்பது முடிவான தீர்மானமாயிற்று. காந்திஜியை அணுகிக் கூறினல், காரியம் விரைவில் கச்சிதமாக முடிந்துவிடும்’ என்று ஒருவர் கூற, எல்லோரும் அதை நம்பினர். அந்த சமயத்தில், காந்தி சிம்லாவில் இர்வின் பிரபு என்பவரிடம் அரசியல் பற்றி விவாதித்துக் கொண் டிருந்தார். அவரை சந்திக்க பத்திரிகை ஆசிரியர் நியூகாம் என்பவர் போனர். மிகவும் சிரமப்பட்டு பேட்டிக்கு ஏற்பாடு செய்து, சந்தித்தார். ஹோக்கிக்கு நிதிநிலை சரியில்லை. நீங்கள் ஆவன செய்யவேண்டும் என்று மிகவும் கம்பிக்கையுடன் விளக்கினர். பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த காந்தி அவர்கள், அவருக்கே உரிய பாணியில் ஒரு கேள்வியை கேட்டாராம். அந்தக் கேள்வி கியூகாமை பிரமிக்க வைத்ததல்லாமல் மனமுடைந்து திரும்பச் செய்ததாம்! அப்படி அவர் கேட்ட கேள்வி தான் என்னவாக இருக்கும் என்று கினைக்கிறீர்கள்! ஹாக்கி என்ருல் என்ன? என்பதுதான் அவர் கேட்ட கேள்வி,
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/51
Appearance