பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். நவராஜ் செல்லையா 59 பாபரும் உடற்பயிற்சியும் எங்கோ பிறந்து இந்தியா வந்த பாபர், முகலாயப் பேரரசை அமைத்ததாக நாம் சரித்திரத்தில் படித் திருக்கிருேம். ஒரு பெரிய பேரரசை அமைக்கும் அளவுக்குப் பலமும் புத்திக்கூர்மையும் பாபருக்கு எப்படி வந்தது? இராணுவப் படை வீரர்கள் செய்கின்றதைப்போல கடுமையான உடற் பயிற்சிகளை அவர் செய்து, தனது தேகத்தை மிகவும் கட்டாக வைத்திருந்தார். அதல்ை தான் அவர் செய்த உடற்பயிற்சிகள் மிகவும் கடின மானதாகவே இருந்திருக்கின்றன. தனது விலாப்புறத்தின் பக்கவாட்டில் இரண்டு மனிதர்களைத் துக்கிக்கொண்டு, நீண்ட துாரம்ஒடுவார். கங்கையின் ஆழப் பகுதிகளில் நெடுந்துாரம் நீந்துவார். சளைக்காமல் நீந்திக் கொண்டே இருப்பார். இவ்வாறு மிகவும் சக்திவாய்ந்த உடற்பயிற்சி களே தினந்தோறும் செய்து வந்ததுதான், அவர் எதிரி கஜள மிக சர்வ சாதாரணமாக சமாளித்ததுடன், மாபெரும் சாம்ராஜ்யத்தையும் ஸ்தாபிக்க முடிந்தது என்று வரலாற்ருசிரியர்கள் குறிப்பிடுகின்ருர்கள், அவர் வெற்றியின் இரகசியம் கட்டான உடல்தான், குசேலர் குரும்பம் சிறியது ! 1927ஆம் ஆண்டு 400 மீட்டர் தடை தாண்டி ஒடும் பந்தயத்தில் (Hurdles) உகாண்டா நாட்டைச் சேர்ந்த அகிபுவா என்ற வீரர் வெற்றி பெற்ருர். அவர் வெற்றி