பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 விளையாட்டு அமுதம் சுடர் வரவேற்கப்படுகிறது என்பதுதான். அந்த விளை யாட்டுக்கள் தனிமனிதனின் வலிமை, துணிவு, வீரம், சிறப்பான குணங்கள் எல்லாம் மனித இனத்தை செழிப்பாக்கவும் முன்னேற்றவும், அத்துடன் உலக சமாதான எண்ணத்தை உருவாக்கவுமே பயன்பட வேண்டும் என்ற பேராண்மையை எதிர்பார்க்கின்றன. என்கின்ற லட்சியத்தின் தன்மையை பிரதிபலிக்கவே ஒலிம்பிக் சுடரை ஏற்றுகிருர்கள். ベレ இப்படியும் ஒரு பலமா ! பலம் என்றதும் நமக்கு மகாபாரதத்தில் வரும் பீமன் நினைவுதான் வரும். கிரேக்கத்திலும் ஒரு பீமன் வாழ்ந்திருக்கிருன். அவன் பெயர் மிலோ என்பது. மிலோவும் பீமனைப்போல ஒரு மல்யுத்த வீரன் தான். அவன் ஆறு ஒலிம்பிக் பந்தயங்களில் (24 வருடங்கள்) தொடர்ந்து வெற்றி வீரனுக வந்திருக்கி ருன். அவனை யாரும் மல்யுத்தத்தில் வென்றதே கிடையாதாம். ஏனெனில் அவனது பலம் அப்படிப் பட்டதாம். ஒரு சிறு கன்றுக்குட்டியை தன் தோளிலே சுமந்து பழக்கிய அவன், அந்தக் கன்றுக்குட்டி பெரிய காளை மாடாக வளர்ந்த பிறகும், தன் தோள்களின்மீது போட்டு சுமந்து கொண்டு ஒவ்வொரு நாளும் நடப்பானம். அத்தகைய மிலோவைப்பற்றி இப்படியும் ஒரு கதை உலவுகிறது.