பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். நவராஜ் செல்லையா - 73 அகலப் பரப்பில் கயிற்றை இழுத்துக் கட்டி அடித்தாடி ர்ைகள். ராகட் (Rahat) என்னும் அரேபியச் சொல்லுக்கு உள்ளங்கை என்பது பொருளாகும். அதனுல்தான் பந்தடித்தாடும் மட்டைக்கு ராக்கெட் என்று ஆங்கிலத் தில் பெயர் வந்து விட்டது. டென்னிஸ் பந்தினை அடிக்க டென்னிஸ் மட்டைக்குக் கயிறு தேவைப்பட்டது. அது எந்த வழியிலும் மென் மையாக உறுதியாக, வலிமையாக இருக்க வேண்டும் என்று ஆட்ட வல்லுநர்கள் விரும்பினர்கள். அதை ஆராய்ந்து ஒருவர் கண்டுபிடித்தார். அதாவது அது ஆட்டின் குடலில் இருக்கிறது என்று. ஆட்டுக் குடலின் மென்மைப் பகுதியிலிருக்கும் நரம்பிழைகள் மிகவும் e-plġlu uTsar 51(Strings) என்பது தான் அந்த ஆராய்ச்சி. அவ்வாறு ஒரு ஆட்டின் குடலி லிருந்து எடுத்தால், சுமார் 20 அடி நீளம் அது கிடைக் கும். இவ்வாறு ஒரு மட்டைக்கு நரம்பு வேண்டுமென்ருல், சுமார் 50 ஆடுகளாவது குடல் தரவேண்டும், குடலைக் கொடுத்து விட்டு ஆடு உயிர் வாழுமா என்ன? ஆக, ஒவ்வொரு பந்தாடும் மட்டைக்கும் நரம்பு கிடைப்பதற்காக 50 ஆடுகளுக்கு மேல் உயிரைக் கொடுத்திருக்கின்றன. எத்தனையோ ஆ டு க ளி ன் தியாகத்தால் தான் இன்று டென்னிஸ் ஆட்டம் வானுயர வளர்ந்திருக்கிறது போலும் ! ஆட்டுக்குடல் நரம்புகள் போல், இப் பொழுது கைலான் நரம்புகள்தான் டென்னிஸ் மட்டையை அலங் கரிக்கின்றன. என்ருலும், ஆடுகளின் தியாகத்தை நாம் போற்றுவோமாக! வி. அ.-5