பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். நவராஜ் செல்லையா 77 இவ்வளவு வேகமாக ஒடவும், உயரமாகத் தாண்ட வும் கூடிய ஆற்றல்மிக்க ஒரு வீரன் எந்த ஆண்டு வரப்போகிருனே? எங்கே பிறந்திருக்கிருனே? யார் கண்டார்? கல்கி அவதாரத்துக்குக் காத்திருப்பதுபோல காமும் காத்திருப்போம்! விளையாட்டில் விடாக்கண்டன் ! தலை உடைந்து 130 ஆபரேஷன்கள். மூக்குடைந்து 130 முறை தையல் போடப்பட்டது. 7 முறை தாடை (Jaw) உடைந்துபோய் சரிப்படுத்தப்பட்டது. 4 முறை விலா எலும்புகள் உடைந்துபோயின. 14 முறை இரண்டு முழங்கால்களும் உடைந்துபோய் சரியாயின. இவ்வளவு நடந்ததும் பணியில் ஆடும் ஹாக்கி ஆட்டத்தில் தான் (ice Hockey). அதுவும் இலக்குக் காவலராக விளையாடிய ஹாரிஸ் என்ற ஆட்டக்காரருக் குத்தான். ஹாரிஸ் பலமுறை காயப்பட்டு வீழ்ந்தபோது கூட அந்த விளையாட்டை அவர் விடவில்லை. மீண்டும் மீண்டும் ஆடி மகிழ்ந்தார். காமாக இருந்தால் ஓடி ஒளிந்திருப்போம் அல்லவா? அவரை ஹாக்கியின் இரும்பு மனிதன்' என்ற செல்லப்பெயரிட்டு அழைத்தனர் ரசிகர்கள். தொடர்ந்துவந்த துயரங்களையும்துடைத்தெறிந்து விட்டு, விடாமல் விளையாடி புகழ்பெற்ற ஹாரியை வி2ளயாட்டில் விடாக்கண்டன்’ என்று கூறி நாமும் மகிழலாம் அல்லவா!