பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


e நவராஜ் செல்லையா 11 தோற்ற வீரர் கூறுகிருர். அந்த நடுவரின் குறுக்கிடுதான் தன் தோல்விக்குக் காரணம் என்று ான் &ெனக்கவில்லை. என் ஆட்டத்தில் ஏதோ சில குறைகள் இருக்கின்றன. அவை என்னவென்று க்கே தெரியவில்லை.அவற்றை 币T6ör கண்டுபிடித்து: திருத்திக்கொண்டு, எனது திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.' அத்துடன் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. தனது கடமைய்ை தைரியமாக, பரிபூரணமாக நிறைவேற்றிய நடுவரை நான் வியந்து பாராட்டு கிறேன் .' தோற்றவர்கள் எல்லோரும், நடுவர்களே தாங்கள் தோற்கக் காரணம் என்று கூறி, கடித்துக் குதறுவதை யும், ஓட ஓட விரட்டுவதையும், பொல்லாத வார்த்தை களால் அர்ச்சனை செய்வதையும் கேட்டுப் புளித்துப் போயிருந்த நமக்கு, சீன வீரரின் செம்மாந்த இதயமும் புரிகிறது. கடமை உணர்வுடன் பொழிந்த பண்பான வார்த்தைகளை கேட்கத் தேனுமிர்தமாக இனிக்கிறது. நல்ல உடல் நல்ல மனம் என்பதுதானே நல்ல வர்கள் கொள்கை. இதைப் போன்ற பண்பான இதயத்தைத்தானே விளையாட்டுலகம் உருவாக்கித் தருகிறது என் கிருர்கள். அத்தகைய அருமையான இதயத்தை இதுவன்ருே இதயம்' என்று பாராட்டுகிருேம். விளையாட்டில் பங்கு பெறுகிற அனைவரும் இதுபோன்ற இதயம் பெற வாழ்த்துகிருேம். இறைவனை வணங்குகிருேம்.