பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

விளையாட்டு உலகம்

உடல். பிய்ந்தும் நைந்தும் போன முழங்கால் வரை நீண்ட கால்சட்டை. முழங்கை வரை தொங்கும் சட்டை. கனத்த காலணி. ஒட்டப் பந்தயத்தில் முதல் முறையாகக் கலந்துகொள்ளும் பயம். கொடுமையான வெயில். இவற்றிற்கிடையே பெலிக்சின் பந்தயம் தொடங்கியது. நன்கு பயிற்சி பெற்ற உலகப்புகழ்பெற்ற 31 வீரர்களுடன் பெலிக்ஸ் ஓடத்தொடங்கினான். அது 26 மைல் கெஜ தூரம் ஒடுகின்ற மாரதான் போட்டியாகும்.

முன்பின் ஓடிபழக்கமில்லாத ஓட்டம். இருந்தாலும், அஞ்சா நெஞ்சுடன் ஒடிக் கொண்டேயிருந்தான். ஆங்கிலம் தெரியாவிட்டாலும், அரை குறை பாஷையோடு வேடிக்கை பார்ப்பவர்களிடம் பேசிக் கொண்டும் கேலி செய்து கொண்டும் ஓடினான். இடையிலே பசி வந்துவிட்டது. என்ன செய்வது! கைக்கெட்டும் உயரத்தில் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பச்சை ஆப்பிள் காய்கள் சிலவற்றைப் பறித்துத் தின்று கொண்டே ஓடினான். பசி மறைந்து விடவில்லை. கொஞ்சம் குறைந்ததுபோல் தோன்றியது.

வெயிலின் வெம்மையைத் தாங்காமல், பாதிக்கு மேற்பட்ட வீரர்கள் பாதியிலே படுத்துவிட்டனர். என்றாலும் பெலிக்ஸ் ஓடிக்கொண்டே இருந்தான். வெயில் கொடுமையும், மற்ற காரணங்களும் அவனுக்கு வயிற்று வலியை உண்டாக்கிவிட்டாலும்ஓட்டத்தை விடவில்லை. கீழே விழவில்லை. பயிற்சி பெற்ற ஒட்டக்காரர்களில் பதினேழுபேர் விழுந்ததும் அன்றி, பந்தயத்திலிருந்தும் விலகிக் கொண்டனர்.

அஞ்சாத அஞ்சல்காரன் அழகாக ஓடிவந்து, அரங்கத்துள் நுழைந்து முடித்தபோது, நான்காவதாக