பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வரலாறு வாழ்த்துகிறது ! இருந்தவர்கள் அத்தனைபேரும் முயன்று பார்த்து விட்டார்கள். முடியவில்லை. ஆறடி உயரத்தில் வைக்கப் பட்டிருக்கும் குறுக்குக் குச்சியைத் தாண்ட முடியாத அந்த இளைஞர்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதாவது யாரால் முடியும் என்று! முயற்சி செய்தவர்களின் முகங்களைப் பார்க்க என்னவோ போலிருந்தது அந்த இளைஞனுக்கு. அங்கே வந்தான். ஆறடி உயரத்தை அனுயாசமாகத் தாண்டி விட்டு, அவன் தான் செய்து வந்த வேலையைப்பார்க்கப் போனன். அவன் செய்த வேலை என்ன தெரியுமா? பயன்படுத்தப்படும் அந்த விளையாட்டு மைதா னத்தை சுத் தட்படுத்தி வைப்பதுதான். பயிற்சி செய்த வீரர்கள் ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தார்கள். தங்களால் தாண்ட முடியாத உயரத் தைத் தாண்டிக் காண்பித்த அந்த இளைஞனை, மிகவும்