பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ். நவராஜ் செல்லையா 25 கொள்ளும் வாய்ப்பினையும் அந்த வீரன் பெற்றுவிட் டான். சிறந்த ஒட்டக்காரன் என்ற புகழையும் பெற் றிருந்த அந்த வீரன், அந்த ஆண்டு மாரதான் ஒட்டத் தினை அவன் தான் வெல்வான் என்ற நம்பிக்கையையும் பெருவாரியாகப் பெற்றிருந்தான். லண்டன் மாநகரத்தில் நடந்த பந்தயத்தில் மாரதான் ஒட்டப்பந்தயம் தொடங்கியது. லண்டன் மாநகரத்து மக்களுக்கெல்லாம் அந்த 22 வயது இளைஞன் மீது அளவிலா அன்பு இருந்ததற்குக் காரணமும் இருந்தது. இங்கிலாந்து காட்டின் நகைச் சுவை நடிகரான சார்லி சாப்ளின் என்பவரைப் போன்ற முகச் சாயல், மீசை அமைப்பு, உடல் தோற்றம் கொண்டிருந்ததும், ஒரு காரணமாகும். அந்த இளைஞன் பெயர் டோரண்டோ பியட்ரி. ஒட்டம் தொடங்கி, முடியக் கூடிய கேரம். அந்தப் போட்டி மார தான் ஒட்டமாகும். மக்கள் குழுமி யுள்ள அரங்கத்தில் ஒரு சுற்றுடன் ஒட்டம் முடிய வேண்டும் என்பதும் ஒரு விதி. டோரண்டோவும் முதல் மனிதனுக 26 மைல் துாரத்தை ஒடி முடித்துவிட்டு, அரங்கத்துள் நுழைந்துவிட்டான்.அங்கிருந்த அத்தனை பேரும் ஆனந்த ஆரவாரம் செய்தார்கள். ஆல்ை, விதி அங்கு வேறுவிதமாக விளையாடிக் கொண்டிருந்தது. வலது புறமாக ஓடவேண்டியவன், தவருக இடது புறமாக ஒடத் தொடங்கிவிட்டான். கொஞ்ச துாரம் சென்ற பிறகுதான், மக்கள் கூட்டம் கூச்சல் போடத் தொடங்கிய போதுதான் , அவனுக்குப் புரிந்தது. தவறைத் திருத்திக்கொண்டு, திரும்பி சரியான பாதைக்கு வந்து ஒட ஆரம்பித்தான். வி. உ.-2