பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ். நவராஜ் செல்லையா

31

அழைத்தனர். ஆனால் அவனது உண்மையான பெயர் ராய் எவ்ரி என்பதாகும்.

இளம்பிள்ளை வாதத்தை மட்டும் வெல்லாமல், எதிரே யாரும் போட்டியிட இல்லை என்று மூன்று ஒலிம்பிக் பந்தயங்களில் வென்று, இவனைப் போல் ‘இனி ஒருவர் இல்லை காண்’ என்று வரலாற்றாசிரியர்கள் புகழும் வண்ணம் வரலாறு சமைத்த ராய் எவ்ரியின் முயற்சியைப் பாருங்கள். நமக்கெல்லாம் ஓர் நல்ல முன்னோடி அல்லவா!