பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


33 எஸ். நவராஜ் செல்லையா கொள்வார்கள். நான்காண்டு காலம் மன்னனுக வாழ்ந்த வீரனும், போட்டியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுகிற வீர2னயே ராணி தன் கணவனுகத் தோந்தெடுத்துக் கொள்வாள். தோற்றுப் போகின்ற பழைய மன்னன் கதி என்ன வாகும் என்ருல், இரண்டு காரியங்களில் ஒன்றை அவனே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். ஒன்று தலைமைக் கடவுள் பீடத்திலே தன் தலையை வைத்துத் துண்டிக்குமாறு கேட்டுக் கொள்ளலாம். அலலது மலை உச்சியில் வைத்துத் தள்ளிவிடும்படி மன் ருடலாம்.எப்படியும் அவன் இறக்க வேண்டியவனே. இவ்வாறு இந்திராணியாக அந்த ராணி சிரஞ்சீவியாக வாழ, நான்காண்டுகளுக்கு ஒரு முறை பழைய வீரன் கொல்லப்பட, புதிய வீரன் மாலை சூட என்ற வழக்கம் இருந்து வந்த தாம். நான்காண்டுகளுக்குள் ஒரு வீரனின் அல்லது மனிதனின் பலம் குறைந்துபோய்விடுகிறது என்ற கிரேக்கர்களின் கம்பிக்கையை வெளிப்படுத்த, இந்தக் கதை உருவாக்கப்பட்டதோ அல்லது உண்மையாக நடந்ததோ நாமறியோம். வரலாற்றிலே இக்கருத்து காணப்படுகிறது. அந்த அடிப்படையில் தான் கான் காண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் பந்தயங்கள் கிரேக்க நாட்டிலே நடத்தப்பெற்றன. அதே கிரேக்க வரலாற்றில், மிலோ என்ற மல்யுத்த வீரன் தொடர்ந்தாற்போல் 6 ஒலிம்பிக்