பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34 விளையாட்டு உலகம் பந்தயங்களில் வெற்றி வீரனுக விளங்கின்ை என்ற ஓர் குறிப்பினையும் கம்மால் காண முடிகிறது. படிக்கின்ற கருத்திலே, பற்றும் பிடிப்பும் இல்லாமல் போகலாம் என்பதேைலா என்னவோ, நாம் வாழ்கின்ற காலத்திலேயே வலிமை மிக்க மிலோ போன்ற வீரன் ஒருவனைக் காண்கிருேம். அவனது ஆற்றல்மிகு. சாதனையைப் பார்த்து வியந்து மகிழ்கிருேம். 19 வயது இளைஞகை மெல்போர்ன் ஒலிம்பிக் பந்தயப் போட்டிக்கு 1956-ம் ஆண்டு வருகிருன். தட்டெறியும் போட்டியில் ஒலிம்பிக் சாதனை செய்து தங்கப் பதக்கம் பெறுகிருன் , 23 வயது இளைஞனுக 1960ம் ஆண்டு ரோம் நகரில் நடக்கும் ஒலிம்பிக் பந்த யத்திற்கு வருகிருன் , 194 அடி 2 அங்குலம் எறிந்து புதிய சாதனை நிகழ்த்தி, தங்கப் பதக்கத்தோடு 27 வயது வீரனுக 1964ம் ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் பந்தயத்திற்கு வருகிருன். 200 அடி 1 அங்குலம் எறிந்து வெற்றி வீரனுகச் செல்கிருன். திருமணம் நடக்கிறது. விமானக் கம்பெனியில் பணி |ரிகிருன் . சாதாரண மனிதனுக்குரிய அன்ருட செயல் முறைகளிலும் ஈடுபடுகிருன். என்ருலும் தன் குறிக்கோ8ள மறக்கவில்லை. உடல் வலிமையை இழக்க வில்லை. 31 வயது விவேகம் நிறைந்த வீரனுக மெக்சிகோ நகரில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்திற்கு வருகிருன். 212 அடி 6 அங்குலம் தட்டெறிந்து உலக சாதனை புரிந்து உலகையே வியப்பில் ஆழ்த்திவிடுகிருன். v,