பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ். நவராஜ் செல்லையா

35


அந்த அமெரிக்க மாவீரனின் பெயர் ஆல்பிரட் ஓர்ட்டர் என்பதாகும். திருமண வாழ்க்கை அவனை திசை திருப்ப முடியவில்லை. பணிபுரிந்த உத்தியோக வாழ்க்கையால் அவன் கவனத்தை மாற்றமுடியவில்லை. ஏறிக் கொண்டிருக்கும் வயதும் அவனது வலிமையை இறக்கிவிட முடியவில்லை. 1968ம் ஆண்டு மெக்சிகோ நகரில், தோள்பட்டையில் காயமுற்றதற்காக, இரும்புக் காலரை அணிந்து கொண்டு தட்டினை எறிந்துதான் வெற்றி பெற்றான். அந்த காயமும் வேதனையும் கூட அவனது வெற்றியை மாற்றியமைக்க முடியவில்லை.

16 ஆண்டுகள் தொடர்ந்தாற்போல், 4 ஒலிம்பிக் பந்தயங்களில் தட்டெறியும் போட்டியில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கத்தைக் கொண்டோடிச் சென்ற மாவீரன், 1972, 1976ம் ஆண்டு நடந்த போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. காரணம் பயமல்ல! வலிமை குறைந்து போய்விட்டது என்பதனாலும் அல்ல! பிறகு ஏன் கலந்து கொள்ளவில்லை?

"தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே வந்தால், போற்றுவதற்குப் பதிலாக மக்கள் வெறுக்கத் தொடங்கிவிடுவார்களோ என்ற அச்சம்தான்" என்று ஆல்பிரட் ஓர்ட்டர் கூறுவதைக் கேட்கும்போது, பதில் சரியானதுதான் என்று தோன்றுகிறது.

1980ம் ஆண்டு மாஸ்கோவில் நடக்க இருக்கும். ஒலிம்பிக் பந்தயத்தில் மீண்டும் தட்டெறியும் போட்டியில் கலந்துகொள்ள விரும்புகின்ற ஓர்ட்டருக்கு அப்பொழுது வயது 43 ஆக இருக்கும்.

'வயது என் செயும், வளையம் வரும் முதுமை என் செயும்? நயமாய் உடல்தனை நாளெல்லாம்.