பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

விளையாட்டு உலகம்


தடுமாறிக் கொண்டிருந்தான். அந்த வீரனின் பெயர் மெல்வின் ஷெப்பார்டு (Melvin Shappard) என்பதாகும்.

பள்ளிக்கூட மாணவனை. ஜேம்ஸ் மெர்டித் எனும் அந்த இளைஞனே அருகில் அழைத்தான். அவன் காதருகில் தன்னுடைய திட்டத்தை மிகவும் ரகசியமாகக் கூறினன். விவரம் புரியாத ஜேம்ஸ் மெர்டித்தும், அனுபவம் உள்ள தன் தாயகத் தோழன் கருத்துக்குச் செவி கொடுத்ததும் இல்லாமல், சம்மதத்திற்கும் தலையாட்டி விட்டான். தன் தந்திரம் பலித்ததென்று மெல்வின் வெடிப்பார்டும் துள்ளித்திரிந்தான் மகிழ்ந்தான் . அந்த மகிழ்ச்சிக் கிடையே போட்டி நடைபெறும் நாளும் வந்தது.

போட்டி தொடங்குவதற்கு முன், பள்ளிக்கூட மாணவனைப் பார்த்தான் மெல்வின் வெடிப்பார்டு. சரியென்று கண்ணசைவில் சம்மதத்தைக் காட்டுவிட்டு, பந்தயத்திற்குத் தயாராகிவிட்டனர் இருவரும்.

நடக்க இருக்கின்ற பந்தய நிகழ்ச்சியோ 800 மீட்டர் ஒட்டம். அதில் ஒரே மூச்சில் விரைவாக ஒடுகின்றவர்களுக்கே வெற்றி கிட்டும். அதில், முதலாவதாக ஒடுகின்றவர்கள், தொடக்கத்திலேயே அசுர வேகத்தில் ஒடி கொஞ்ச துாரம் சென்றதும், களைத்துப் போய் ஒட முடியாமல், போட்டியிலிருந்தே விலகிப் போய் நின்று விடுவார்கள். அந்த வீரனைப் பின்பற்றிப் போகின்ற மற்ற வீரர்களும், விவரம் பின்னல் புரிந்து, வேதனையுடன் ஒட முடியாமல் ஒடி முடிப்பார்கள். இது அன்றடம் நடக்கக்கூடிய அவல நிகழ்ச்சியாகும்.

மெல்வின் வெடிப்பார்டினுடைய திட்டமும் இது தான். போட்டி தொடங்கிய உடனேயே, ஜேம்ஸ்