பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5() விளையாட்டு உலகம் அந்தச் சிறுமிக்கு வரப்பிரசாதமாக அமைந்து விட்டது. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பள்ளியில் சேர்ந்துகொண்ட அச் சிறுமி, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக உடலால் மட்டுமல்ல, விளையாட்டுத் திறன்களிலும் வளர்பிறையாக வளர்ந்துகொண்டே வந்தாள். 800 மீட்டர் துரம் ஒடுதல், வேலெறிதல், இரும்புக்குண்டு எறிதல்போன்ற கிகழ்ச்சிகளில்தான் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் எழுச்சியும் இருந்ததே தவிர, வேறெதிலும் இல்லை. சிறுமிக்குப் பயிற்சியளித்த எர்கார்டு மைக் எனும் பயிற்சியாளரே அறித்துகொள்ள முடியவில்லை அந்தச் சிறுமியின் ஆற்றலை 15 வயது நிரம்பியபோது, அந்த இளமங்கையின் உயரமோ 1.58 மீட்டர் உயரமே இருந்தது. அப்பொழுது அவள் தாண்டிக் காண்பித்த உயரமானது 1.65 மீட்டர் இருந்தது என்பது எல்லோருக்கும் ஆச்சரியமாகவே இருந்தது. அவளது பயிற்சியாளரும் உயரத் தாண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உற்சாகம் தரத்தொடங்கினுள். 1972ஆம் ஆண்டு மியூனிக்கில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்து, போட்டியில் கலந்து கொண்டபோது, ஏழாவது இடத்தைத்தான் அடைய முடிந்தது. முதலாவதாக வந்த மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்தவரான வீராங்கஜன, உல்ரிக் மேபோர்த் என்பவருக்கும் ஏழாவதாக வந்த மங்கைக்கும் இடையே இருந்த உயரமானது 7 சென்டி மீட்டர் வித்தியாசம் இருந்தது. உல்ரிக் தாண்டிய உயரம் 6 அடி 3; அங்குலம். (1.92)