பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ். நவராஜ் செல்லையா 51 ஏழாவதாக வர் து விட்டோமே, இனி எப்படி முன்னுக்கு வரமுடியும்' என்ற தாழ்வு மனப்பான்மை கொண்டு விடவில்லே அந்த மங்கை. தாளாத முயற்சி யையும் தனியாத ஆசையையும் பயிற்சியிலே பெருக்கத் தொடங்கிவிட்டாள். உழைப்பு விண்போகவில்லை. உண்மையான முய ற்சி அவ8ளக் கைவிட்டுவிடவில்லை. உல்ரிக் தாண்டிய உயரத்தைவிட 2 சென்டி மிட்டர் உயரம் அதாவது-1.94 மீட்டர் உயரம் தாண்டி, உலக சாதனையை நிகழ்த்தினுள்-1974ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24ந் தேதி பெர்லினில் நடந்த பந்தயத்தில். உலகத்தின் கண்களிலே உயர்ந்த சின்னமாகத் தோன்றத் தொடங்கினுள் அந்த மங்கை. 1974ஆம் ஆண்டிலேயே ரோம் நகரில் நடந்த பந்தயத்தில் 1. 95 மீட்டர் உயரம் தாண்டி மீண்டும் உலக சாதனையை மாற்றியமைத்தாள்.

  • உலக சாதனையை மாற்றி விட்டோம். இனி கம்மை யாரும் வெல்லமுடியாது’ என்று, துரங்கித் தோற்ற முயல் எண்ணம் கொண்டுவிடவில்லை அவள். தன்னை யாரும் வென்றுவிட்டால் என்ன செய்வது' என்ற அடக்கமான அச்சத்திலே, தொடர்ந்து பயிற்சிகளைச் செய்துகொண்டே, தேகத்தை திறமையான நிலையிலே பாதுகாத்துக் கொண்டே வந்தாள். பந்தயங்களிலும் கலந்துகொண்டாள்.

1976ஆம் ஆண்டில் டிரஸ்டன் என்ற இடத்தில் 2.97 மீட்டர் உயரம் தாண்டி மூன்ருவது முறையாக உலக சாதனையைத் தீட்டினள். அத்துடன் உயரத்தை கிறுத்திக் கொள்ள முடிந்ததா? அதுதான் இல்லை.