பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாதைக்கேற்ற பயணம் ! o காற்றைக் கிழித்துக் கொண்டு கடுவேகமாக ஒடிக் கொண்டிருக்கும் ரயிலின் ஒரு மூலையில், கண்ணிருங் கம்பலையுமாக ஒரு பெண் உட்காந்திருக்கிருள். அவள் கையிலே ஒரு குழந்தை. கம்பளியால் போர்த்தி மூடப் பட்டிருக்கிறது அந்தக் குழந்தை. உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் குழந்தை முகத்தைப் பார்த்துப் பார்த்து, தானும் உயிரிழந்த நிலையில் பிரயாணம் செய்கிருள் அந்தத் தாய். - வாழ்க்கையில் வசதியும் வளமும் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவளா என்ருல் அல்லவே அல்ல. அமெரிக்க நாட்டில், புகையிலை பயிரிடும் 6P(ԱԵ எஸ்டேட்டில் கூலியாகப்பணியாற்றும் குடும்பத்தினள். உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவளா என்ருல் அதுவும் இல்லை. நீக்ரோ இனவழி வந்தவள். வாரம் ஒரு முறை 90 மைலுக்கு அப்பால் உள்ள இலவச மருத்துவமனைக்குத் துரக்கிக் கொண்டு அல்லல் அடைகின்ருளே! அதுதான் அவளுக்கு முதல்