பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ். நவராஜ் செல்லையா

57

ஒன்றைத்தயார் செய்து குழந்தைக்குப் போட்டார்கள். 11வது வயதில் நன்றாக நடக்கத் தொடங்கினாள். 13வது வயது வரை, தனியாக உருவாக்கபட்டக் காலணியுடன் நடந்த அந்தப் பெண், மற்ற எல்லோரையும் போல வீதியிலே நடக்கப்பழகினாள்.

எழுந்து நிற்கவும், நடக்கவும், ஓடவும், சக்தி வரப் பெற்ற குழந்தையைக் கண்டு, உற்சாகத்தில் மகிழ்ந்தே போனாள் தாய். இதற்கிடையில் பள்ளிப்படிப்பும் தொடர்ந்தது. பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே விளையாடவும் தொடங்கி விட்டாள். ‘கடவுள் கால்களைக் கொடுத்துவிட்டான் நடக்க. இதுவே போதும்’ என்று அந்தப் பெண் திருப்தியடைந்து விடவில்லை.

‘உலகமே புகழும் வண்ணம், சிறந்த ஓட்டக் காரியாகத் திகழ்வேன்’ என்று உறுதி பூண்டாள். நிற்க முடியாமல் நிலைகுலைந்து கிடந்த பெண்ணின் நெஞ்சிலே எழுந்த இந்த உறுதியை, வீட்டின் வறுமையோ, மற்றும் சுற்றுப்புற சூழ் நிலையின் கொடுமையோ தடுத்து நிறுத்திவிட முடியவில்லை.

உடற்பயிற்சிகளை சலிப்படையாமல் தினந்தோறும் செய்தாள். ஓடப் பழகினாள். பயிற்சி பெற்றாள். பள்ளிகளில்,கல்லூரிகளில் சிறந்த வெற்றிகளைக் குவித்தாள். அவளது ஓட்டவேகத்தைக் கண்டு நாடே வியந்தது. இந்த நிலையில்தான், 1960ம் ஆண்டு ரோம் நகரில் ஒலிம்பிக் பந்தயம் நடக்கவிருந்தது. அமெரிக்கா நாட்டின் பிரதிநிதியாக ஓடுவதற்காக அந்தப் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.

வி. உ.-4