பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


56 விளையாட்டு உலகம் துன்புறும் குழந்தையைப் பார்க்கும் பொழு தெல்லாம், தாயின் மனம் தணலில் இட்ட மெழுகாகக் கரைந்தது.இந்தக் குழந்தையை எப்படியும் காப்பாற்றி யே தீருவேன்! மனதுக்குள்ளே சபதமிட்டாள் அந்த வீரத்தாய்...அந்தத் தீவிரப்பணியிலேதான், வாரம் ஒரு முறை 90 மைல்களுக்கு அப்பாலுள்ள இலவச மருத்துவ மனேக்குக் கொண்டு சென்ருள். வாரக் கணக்கில் போனுலும், மாதக் கணக்கில் பயணம் முடிந்து நோய் குணமாகியிருந்தாலும், வெற்றி என்று கூறலாம். ஆனல் வருடங்கள் பல ஆகியும் எந்த விதமான குணமோ, முன்னேற்றமோ ஏற்படவே இல்ஜல. தோல்வி முகத்தைப் பார்த்தாலும், தொய்ந்து கிடந்த குழந்தையின் முகத்தைப் பார்க்கும் பொழு தெல்லாம், பார்த்து விடுவோம் ஒருகை என்ற துணிவு தொடர்ந்ததே தவிர, ஒதுங்கிப்போய்விடவில்லை. உறுதியாக இருந்தத் தாய்க்கு இறைவனே அருள் வரம் தந்தது போல, மருத்துவம் மலர் முகம் காட்டத் தொடங்கியது. எட்டு ஆண்டுகள் தொடர்ந்து வைத்தியம் செய்த பிறகு, கைகால்கள் செயலிழந்து போய்க் கிடந்த குழந்தை, தள்ளடியவாறு நிற்கத் தொடங்கியது. கொஞ்சங் கொஞ்சமாக முன்னேற்றம் பெருகியது. விட்டிலே படுக்கையிலேயே படுத்துக் கிடந்த குழந்தையானது: வீட்டு வாசலிலே நடக்கத் தொடங் கியது. ஒவ்வொரு நாளும் தன் வேலைக்குப் போய்வந்த நேரம் போக,பிள்ளைக்குக் கைகால் பிடித்துத் தடவி பணி செய்தாள் தாய். எட்டாவது வயதில் நடக்கத் தொடங் கியது அந்தக் குழந்தை. கால்களுக்கு வலிமை இல்லை கிற்க. உடலைத் தாங்கிட பொருத்தமான காலணி