பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தன்மானத் தங்கம்!

== - --- -o-o-o: فقصد -

ஒலிம்பிக் பந்தயத்தில் நீ வென்ற தங்கப் பதக்கங்களை எல்லாம் உடனே திருப்பித்தர வேண்டும்' என்ற கட்டளையைக் கேட்ட அந்த வீரனுக்கு கேட்கவே

அதிர்ச்சியாக இருந்தது. 'உலகத்திலேயே நீதான் சிறந்த வீரன்' என்று புகழ் பாடிக்கொண்டே தங்கப் பதக்கங்களை அணி வித்துக் கெளரவித்த ஸ்வீடன் தேசத்து மன்னன் பாராட்டிய வீரனைப் பார்த்தா இப்படி ஒரு கட்டளை? என்று அமெரிக்காவே அயர்ந்து போனது. ஒரு தங்கப் பதக்கம்கூட வாங்க முடியாத காடுகள் உலகத்திலே எத்தனையோ இருக்கின்றன. பென்டாத்த லான் எனும் 5 நிகழ்ச்சிப் போட்டிகளிலும், டெக்காத்த லான் எனும் பத்து நிகழ்ச்சிப் போட்டிகளிலும் வெற்றி பெற்று, தங்கப் பதக்கங்களை ஏற்று, தன் தாயகமான அமெரிக்காவிற்கு வானளாவிய புகழை வாரிக்கொண்டு வந்த மாவீரனைப் பார்த்துத்தான், இந்தக் கட்டஇ. கட்டாரியாகப் பாய்ந்தது. \