பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


--- தனிப்பெருந் தலைவன்! அருகிலிருந்த அனைவரும் அன்புடன் வேண்டு கோள் விடுத்தார்கள். தயவு செய்து விளையாட் டிலிருந்து விலகி வந்து விடுங்கள்’ என்று. வேண்டா வெறுப்பினுல் அல்ல. அவர் விளையாட்டு, அங்கு வேடிக்கை பார்ப்பவர்களை எரிச்சல் முட்டி வேதனையை ஊட்டுகிறது என்பதினுலும் அல்ல. அந்த வீரன் மேல் கொண்டிருக்கும் அளப்பரிய அன்பின் காரணமாகத் தான் அந்த ஆணை எழுந்தது. ஆட்டம் தொடங்கி 4 கிமிடத்திற்குள்ளேயே, ஆட்டத்தை விட்டு வெளியே வாருங்கள் என்ருல் வந்து விடுங்கள் என்று வற்புறுத்தி அழைத்திட வேண்டு மென்ருல் ஏதாவது விசேஷம் இருக்குமே! ஆமாம்! அந்த விளையாட்டு வீரன்: அல்ல, அந்த விளையாட்டுக் குழுவின் தலைவனின் கையானது ஆட்ட நேரத்தில் முறிந்து போனதுதான் காரணம். அந்தத் தலைவனே, வெளியே கான் வந்தால் என் குழு ஆட்டக்காரர்கள் சோர்ந்து போய்விடுவார்கள். அதல்ை ஆட்டத்தில் தோற்றுப்போய் விடுவார்கள்.