பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ். நவராஜ் செல்லையா t,", அந்தத் தோல்வி என் தாய் நாட்டின் தன்மானத்தை யும் பொன்னை புகழையும் போக்கிவிடும் என்று கூறிக்கொண்டே மறுத்தான். மறுத்ததோடல்லாமல் விளையாடிக்கொண்டும் இருந்தான். அது சாதாரணப் போட்டி அல்ல, ரக்பி ஆட்டம். பந்துக்காக ஒருவர் மேல் ஒருவர் விழுந்து தாக்கி, தள்ளி, அழுத்தி விரட்டிப்பிடித்து ஆடுகின்ற ஆட்டம் அது. ஆஸ்திரேலியாவிற்கும் கிரேட் பிரிட்டனுக்கும் இடையே நடைபெறுகின்ற போட்டி அது. போட்டி கடைபெறுகின்ற இடமோ பிரிஸ்பேன் என்பதாகும். 1958ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி. கிரேட் பிரிட்டன் சார்பாகச் சென்ற குழுவின் தலை வனுக்குத்தான் ஆட்டம் தொடங்கிய நான்கு நிமிடங் களுக்குள் கைமுறிந்து விட்டது. கரம் முறிந்து வெளியே வந்து விட்டால், தன் குழுவினரின் திறமும் தரமும் போய்விடும் என்பதால், தன்னுடைய வலியை யும் பொருட்படுத்தாமல் ஆட்டத்தைத் தொடர்ந்து ஆடி தன் குழுவினரை உற்சாகப்படுத்திக் கொண்டி ருந்தான் அந்தத் தலைவன். இடைவேளை நேரம் வந்தது. அந்தத் தலைவ னுக்கோ கையின் வலி தாங்கமுடியாத அளவுக்கு வளர்ந்து கொண்டே வந்தது. வேதனையைக் குறைப் பதற்காக, வலியைக் குறைக்கும் இஞ்செக்ஷ2னயும்: போட்டுக் கொள் கிருன். காரணம். இன்னும் 40 நிமிடங்கள் விளையாடி ஆகவேண்டுமே! பக்கத்திலுள்ளவர்கள், முறிந்த கை பாழாகிப் போய்விடும். பிறகு எதற்கும் பயன்படாது' என்று பயமுறுத்துகின்ருர்கள். ஏதேதோ எடுத்துச் சொல்லி