பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ். நவராஜ் செல்லையா 69 வில்ஜலயே என்ற ஏமாற்றம் ரசிகர்கள் மனதிலே அலை பாய்ந்து கொண்டிருந்தது. இல்லை இல்லை. கனலாகக் காய்ந்து கொண்டிருந்தது. 7வது ரவுண்டு மணியொலிக்குப் பிறகு, வீராவேச மாகப் போட்டி தொடங்கியது. தோற்றிருந்த வீரன், ஜேக்டெம்ப்சி என்ற வீரன் தான். வெற்றி விரன் என் ДD பட்டத்தைக் கொண்டிருந்த ஜீன்டன்னி என்பவன் முகத்திலே கான்கைந்து குத்துக்களை பலமாகக் குத்தி விட்டான். சரமாரியாக விழுந்த குத்துக்களில்ை அதிர்ச்சியடைந்த ஜீன்டன்னி, தற்காப்புக்காகத் தடுத் துக் கொள்ள முடியவில்லை. தாக்குதலின் வேகம் தாங்க முடியாமல், மேடையைச் சுற்றிக் கட்டியிருக்கும் கயிற்றிலே சாய்ந்தான். சாய்ந்த நிலையிலிருந்து மெதுவாக சரிந்தான். சரிந்ததுமில்லாமல், கால்கள் நிஜல கொள்ளாமல் மேடைத் தரையிலே விழவும் செய்தான். இதுதான் எதிரியைத் தாக்க நேரம். ஒரே குத்தில் அவனை நாக்அவுட் செய்துவிட வேண்டும் என்று ஜேக்டெம்ப்சி (Jack dempsey) ஆடிக்காற்ருக விரைந்து வந்தான். முனைந்து கின்ருன். போட்டிக்கு நடுவராகப் பணியாற்றியவர் தாவே பாரி (Dave barry) என்பவர். விழுந்து புரளும் வீரஜன வெற்றியுடன் தாக்க முனையும் முயற்சியைத் தடுத்தார். விழுந்தவனுக்கு இரக்கம் காட்டும் எண்ணத்தால் அல்ல. அதுதான் ஆட்டத்தின் விதி. கீழே கிடக்கும் வீரனைத் தாக்கக் கூடாது. அவன் கீழே விழுந்த பிறகு, மீண்டும் தன்?ன சமாளித்து எழுவதற்கு 10 எண்ணிக்கை (10 Counts) அவகாசம்