பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ். நவராஜ் செல்லையா 'ון மாறிக்கிடந்த ஜீன் டென்னியிடம் தோற்றுப் பேரன் வெற்றியின் விளிம்பிலே வீராவேசத்து. ன் Iன்ெறு கொண்டிருந்த ஜேக் ஏன் தோற்றுப்போனுன்? விதியை மதிக்காத காரணத்தால்தான். தன் எதிரியை அடித்து வீழ்த்திய உடனேயே தனது இடத்திற்குப் போய் நிற்க வேண்டும் என்ற விதியை ஜேக் மதித்திருந்தால், தன்னுடைய இடத்திற்குப்போய் நின்றிருந்தால், நடுவரும் எண்ணிக்கையைத் தொடங்கி யிருப்பார். 10 எண்ணிக்கையையும் முடித்திருப்பார். எதிரியை காக் அவுட் செய்த வீரன் என்ற முடி வினையும் அறிவித்திருப்பார். இப்பொழுது என்ன நடந்தது பார்த்தீர்களார் 10 எண்ணிக்கைக்குள் முடிந்து விட வேண்டிய நிகழ்ச்சி யானது தொடர்ந்தது. 14 விடிைகளும் கீழே கிடந்த பிறகும் தோல்வி பெருமல் இருந்தானே ஜின்டென்னி, அங்கேதான் விதி விளையாடியது. ஆமாம் அவனது விதியும் அதில் விளையாடியது. H மீண்டும் வெற்றி வீரன் பட்டத்தைப் பெற்று விட்டான் ஜின்டென்னி. 1927ம் ஆண்டு செப்டம்ப? மாதம் 22ந்தேதி சிகாகோ நகரில் கடந்த குத்துச் சண்டைப் போட்டியிலே, விதி எவ்வாறு விளையாடி இருக்கிறது பார்த்தீர்களா? விளையாட்டின் விதியும் வாழ்க்கை விதியும் ஒன்றுதான் என்று நம்மை எண்ணத் துாண்டுகின்ற தல்லவா? வாழ்க விளையாட்டு விதி என்று வாழ்த்துவோம். மதிப்போம். வழி நடப்போம். விதி கடப்போம். வெற்றியில் தி?ளப்போம்!