பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அதுதான்
அதிர்ஷ்டம்!

1960ம் ஆண்டில் ஒரு நாள்!

இந்தியர்கள் இதயமெல்லாம் இன்பமழை. எழுச்சி மிக்கக் களிநடனம். தலைநிமிர்த்தி நடக்கவைக்கும் வீர நிலையின் இசைப் பாட்டு. இருக்காதா என்ன? ஒலிம்பிக் பந்தயத்தில் ஓட்டப்பந்தய நிகழ்ச்சி ஒன்றில், கடைசி ஆறு ஓட்டக்காரர்களுக்குள் ஒருவராக ஒரு வீரன். அதுவும் தங்கப்பதக்கத்தைத் தட்டிச் செல்லுகின்ற தகுதியுடன் இந்திய வீரன் இருக்கிறான் என்றால், இன்ப மழை பொழியாதா என்ன?

யார் அந்த வீரன்? எவ்வாறு அந்த நிலைக்கு உயர்ந்தான் என்று பார்த்தோமானால், உப்பரிகையிலே பிறந்து, ஒய்யாரத்தில் வளர்ந்து, உலகை அனுபவிக்க வந்த சிங்காரக் குடியில் தோன்றிய சீமான் அல்ல அந்த வீரன். பட்டணத்திற்கும் அப்பால் ஒதுங்கிக் கிடக்கும் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவன். தந்தையோ ஏழை. படிப்பறியா விவசாயி. மண்சுவராலான ஒரு சிறு குடில். அந்தக் கிராமத்திலேயே படிப்பு வாசனை