பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ். நவராஜ் செல்லையா

73

இல்லையென்றால், இந்தக் குடும்பத்தில் மட்டும் வந்து கொப்புளிக்குமா என்ன?

தன் வீட்டிலிருந்து 2½ மைலுக்கு அப்பால் உள்ள ஒரு கிராமத்தில் படிக்கப் போகின்றான் அந்த சிறுவன். நான்கு வகுப்பு முடிப்பதற்குள் வட இந்தியாவில் அடிக்கடி மாறும் வெப்பமும் குளிரும் பனியும் அவனை வாட்டி வதைத்து விட்டன. என்றாலும், துன்பத்தைத் துடைத்து விட்டுக்கொண்டு நான்காம் வகுப்பை முடித்துக்கொண்டு, வேறு ஊருக்குப்படிக்கப்போகிறான். அந்த ஊரின் துாரம் 7½ மைல். தினம் 15 மைல் துாரம் நடந்து, அறிவுதரும் கல்வியை ஆசையுடன் கற்றான்: இதற்கிடையிலே, இந்தியா இரண்டாகப் பிரிகிறது. பிரிவினை. இச்சிறுவனின் கிராமத்தில் பல அலங்கோல நிகழ்ச்சிகள். தலைகீழ் மாற்றம். கிராமம் அழிக்கப்படுகிறது. தப்பித்தோம் பிழைத்தோம் என்ற உணர்வுடன் சிறுவன் வேறு பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகிறான்.

ஏழைச் சிறுவன் தானே! உணவுக்கு எங்கே போவான்? சிப்பாய்களின் காலணிகளுக்கு பாலிஷ் போடுகிறான் காசு வாங்காமல். ஏன் எனில் பசிக்காக, ரொட்டிக்காக அல்லவா அந்தப் பணியைச் செய்கிறான். ரொட்டியை பதிலாகப் பெற்றுத் தான் வளர்கிறான். இல்லை. தன்னை வளர்த்துக் கொள்கிறான். என்னதான் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாலும், காலம் காத்துக் கொண்டா இருக்கும்! காலம் அவனை வாலிபனாக மாற்றி வைக்கிறது

எப்படியும் ராணுவத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்று முயற்சி செய்கிறான். சிபாரிசு இல்லாததால், அந்த வாய்ப்பும் அவனுக்கு எட்டாக் கனியாகப் போய்

வி. உ.-5