பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

விளையாட்டு உலகம்

விடுகிறது. அதற்காக சும்மா கிடந்திட முடியுமா? ஆட்டோ மெக்கானிக்காக வேலைபார்க்கிறான். மாதம் 15 ருபாய் சம்பளத்தில் ரப்பர் தொழிற்சாலை ஒன்றில் வேலைபார்த்து தன் குடும்பத்தையும் காக்கிறான். காய்ந்த ரொட்டியும் வெங்காயமும் தான் அவன் உணவாகத் தினம் கிடைக்கிறது. அவன் பணியும் வாழ்க்கையும் தொடர்ந்து செல்கிறது. வறுமைச் சுழலில் இருந்து விடுதலை கிடைக்கும் நாளும் வருகிறது.

அந்த இளைஞனின் சகோதரனின் சிபாரிசால் 1952ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சிப்பாயாகப் பணிபுரியும் பாக்கியம் கிடைத்து விடுகிறது. லாட்டரிப் போட்டியில் லட்சாதிபதியானவன் போல் அந்த இளைஞன் மகிழ்கிறான். மாதச் சம்பளம் 39 ரூபாய் தான் என்றாலும், மகிழ்ச்சியடைகிறான். 'போதும் என்ற மனமே பொன் செயும் மருந்து' என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கிறான்.

எப்படியும் புகழ்பெற்று சிறப்படைய வேண்டுமென்ற ஆர்வத்திற்கு, விளையாட்டுத்துறை வழிகாட்டி அழைக்கிறது. ஓடும் களமே உயிர் மூச்சாகக்கொண்டு உண்மை அன்புடன் அடைக்கலம் புகுந்து விட்டான் இளைஞன். ஒட்டமே அவனது வாழ்க்கையின் லட்சியமாக வாழ்வின் ஜீவனாகத் தோன்றிவிட்டது. உலக வெற்றிவீரன் ஆவதையே, இரவும் பகலும் காணுகின்ற கனவாகவும் மாறிவிட்டது.

இடைவிடாப்பயிற்சி. மழை, வெயில், பனி, குளிர் என்று பாராது அவன் தொடர்ந்து செய்த பயிற்சி- இளைப்பிலும் களைப்பிலும் சலித்துக் கொள்ளாமல் சிரமேற்றுச் செய்த பயிற்சி, அவனை இரத்த வாந்தி எடுக்கின்ற நிலைக்கு ஆளாக்கிய பொழுதுங்கூட, அந்த