பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பரபரப்புக்குப் பின்னுல்!


பந்தய மைதானத்தில் பார்வையாளர்களாக அமர்ந்திருந்த அனைவரும், ஆனந்த த்துடன் எழுந்து ஆரவாரம் செய்தனர். வெற்றி வீரனுகப் பந்தய மைதானத்தை அவன் சுற்றி வருவதைக்கண்டு, வியப்பின் எல்லேக்கே சென்று, விந்தைமிகு வீரனே வாயார வாழ்த்தி வரவேற்றனர். 26 மைல்களுக்குரிய அந்த மாரதான் ஒட்டத்தை எவ்வளவு சீக்கிரமாக ஓடிமுடித்து வந்துவிட்டான் என்பதுதான் அவர்களை வியப்பில் ஆழ்த்திவிட்டது. பாயிஸ் நகரத்தின் படுமோசமான பாதையில் அல்லவா ஒட்டக்காரர்களை ஒடவிட்டிருந்தார்கள்! அத்தனை மேடு, பள்ளத்திலும் ஏறி இறங்கி, எதிர்ப்பினைத் தந்த இன்னல்களேயும் மீறி, எத்தனை விரைவாக ஒடி வந்து விட்டான் என்பதிலே அவர்களுக்கு உற்சாகம். புகழாரம் ஆட்டிக்கொள்ளப்போகும் பெருமதிப்பிற். குரிய அவ்விரனே, புகைப்படக்காரர்கள் மின்னல் வேகத்தில் படங்களாக எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வீரன் முகத்திலே ஓடிவந்த களைப்பும் இல்லை.