பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ். நவராஜ் செல்லையா 83 என்று அவர்கள் பேசிக்கொள்வதுபோல் உங்களுக்கும் கேட்குமே! ஆமாம்! அவர்கள் தங்களுக்குள்ளேயும் பக்கத்தில் உள்ளவர்களுக்கிடையிலும் அப்படித்தான் பேசிக கொண்டிருந்தார்கள். 5000 மீட்டர் தூரம் ஒடுகின்ற ஒட்டப் போட்டி அது. சிறந்த வீரர்கள் பலர் ஓட்டத் தொடக்கத்திலே கலந்து கொண்டார்கள். 12, ரவுண்டுக்குமேல் ஒடக் கூடிய துாரம் அல்லவா! அத்தனை சுற்றுக்களையும் சுற்றிவிட்டு ஓட்டத்தை முடிக்கவேண்டிய துாரமும் குறைந்து, வெற்றி பெறவேண்டியவர்கள் யார் என்று கண்டுகொள்ள வேண்டிய நிலையில் இரண்டு வீரர்கள் ஒடி வந்து கொண்டிருக்கும் பொழுதுதான் அந்த சூழ் நிலை அனலாகக் காய்ந்தது. யார் வெல்லப் போகிருர் என்று யாராலும் உறுதி யாகச் சொல்ல முடியாத அளவில் இருவரும் ஒடி வந்தார்கள். முதலாவதாக ஓடிவருகின்ற வீரனின் பெயர் லாரி லெட்டினன் (Lauri Lentinen) எனும் பின்லாந்து வீரன். அவனது பின்னல் ஒரடி இடை வெளியில் ஓடிவரும் வீரன் பெயர் ரால்ப் கில்(Ralph Hill) என்பதாகும். அமெரிக்க நாட்டிலே லாஸ்ஏஞ்செல்ஸ் எனும் நகரத்திலே 1932-ம் ஆண்டு நடைபெறுகிற ஒலிம்பிக் பந்தயம் அது. தன் காட்டு வீரன் தங்கப்பதக்கம் பெறும் நிலையில் இருக்கிருன் என்பதை அறிம் து கொண்ட பார்வையாளர் கூட்டம், படு பயங்கரமாகக்