பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

விளையாட்டு உலகம்

கத்திக் கொண்டிருக்கும் நேரத்தில்தான், பின்லாந்து வீரனுக்கும் அமெரிக்க வீரனுக்கும் இடையே கடும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

எல்லைக் கோட்டைக் கடக்க இன்னும் ஒருசில கெஜ தூரம்தான். பின்லாந்து வீரன் முன்னே ஓட ஓரடி இடைவெளியில் அமெரிக்க வீரன் பின்னே வர, ஆதரவாளர் கூட்டம் ஆரவாரம் எழுப்பியவுடன், அமெரிக்க வீரன் உற்சாகம் பெற்று முன்னே ஓட முனைந்து விட்டான்.

லாரி லெட்டினனைக் கடந்துவிட்டால் முதலாவதாக வந்துவிடலாம் என்ற நினைவுடன், லாரியின் இடது புறமாகக் கடந்து ஓட முயன்றான் ரால்ப், ஆனால் லாரியோ, ‘நம் ஊர் லாரிக்காரன்போல’ வழி தரவில்லை. முன்னே போகாமல் அந்தப்புறம் ஒடினான். அதனால் வழி கிடைக்காமற் போகவே, லாரியின் இடது புறமாகக் கடந்து ஓட முயன்றான்.

இப்பொழுது இடதுபுறமாக குறுக்கே சென்று, முன்னால் ஓட முடியாதவாறு மறைத்துக் கொண்டான் லாரி. இந்த இரு முயற்சிகளையும் கெடுத்துவிட்ட நிலையில் ஓட்டமும் முடிவடைந்துவிட்டது. பின்லாந்து வீரனான லாரி லெட்டினன் முதலாவதாக வந்தான் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. லாரியும் தான்தான் முதலாவதாக வந்திருக்கிறோம் என்று அறிந்து மகிழ்ச்சியடைகின்ற வேளையில்தான், ஒலிம்பிக் பந்தய அரங்கம் முழுவதும் ஓங்காரக் கூச்சல் விண்ணைப் பிளக்கும் வண்ணம் வந்து கொண்டிருந்தது.

‘விதியை மீறிய வீரனுக்கா முதல் பரிசு?’ அடுத்த வரை தடைசெய்து ஓடியது அநியாயம் அல்லவா?