பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

விளையாட்டு உலகம்


போட்டிகளிலும் எங்கள் இனமே வெற்றி பெறும்” என்று போட்டிக்கு முன்னே இட்லர் பேசிய பேச்சுக்கள், உலகத்தை அதிர வைத்திருந்தன. அதற்கேற்ப முதல் வெற்றி ஜெர்மனி வீரருக்கு என்றதும், இட்லர் தன்னுடைய பரிசளிப்பு முறையில் ஒரு புதிய செயலைப் புகுத்தினான்.

அலங்கார பீடத்தில் அமர்ந்திருந்த இட்லர் தன் முன்னே வீரனை வரச்செய்தான். வாயார வாழ்த்தினான். பரிசளித் தான். அடுத்த நிகழ்ச்சி 10,000 மீட்டர் போட்டி, வெற்றி பெற்ற வீரன் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த இல்மரி சால்மினன். அந்த வீரனேயும் அழைத்துப் பாராட்டிப் பரிசளித்தான் இட்லர்.

‘நிக்ரோக்கள் தாழ்ந்த இனத்தவர்கள். அவர்களேத் தங்களுடைய வெள்ளே வீரர்கள் போட்டியில் வீழ்த்தி விடுவார்கள்’ என்பதுதான் இட்லரின் எண்ணம். ஆகவே, பரபரப்புடன் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்க நீக்ரோ வீரர்களின் வெற்றி வாய்ப்புக்கள் விண்ணோக்கி இருந்தன.

அவர்களிலே ஒரு அற்புத வீரன் இருந்தான். அவன் பெயர் ஜெசி ஒவன்ஸ்.

அமெரிக்க நாட்டில் அலபாமா என்ற மாகாணத்தில் குழந்தைகளில்

ஒருவனாக தோன்றினான் ஜெசி ஓவன்ஸ். வறுமையிலும், வளமில்லாத உடலிலும் வாழ்க்கையைத் தொடங்கிய ஓவன்சுக்கு பிறவியிலேயே, விளையாட்டுத் திறமை நிறைந்திருந்தது.