பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இதுவன்ருே இதயம் ! பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் பேரார்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்ட இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரத்தில் நடக்கும் 34வது உலக மேசைப் பந்தாட்டப் போட்டியைக் காண் பதற்காகத்தான். மேசைக்கு முன்னே இறுதி ஆட்டத் தில் கலந்துகொள்ளவிருக்கும் இரண்டு வீரர்களும் போட்டிக்குத் தயாராக இருக்கின்றனர். வீரர். பெயர் மிட்சுரு கோக்னே. 1967ம் ஆண்டு ஒரு முறை உலக வெற்றி வீரர் பட்டத்தை வென்றிருக்கும் பெருமையும் புகழும் உடையவர். 1975ம் ஆண்டு கல்கத்தாவில் கடந்த உலக மேசைப் பந்தாட்டத்திலும் பங்குகொண்டு ஆடி நிறைய அனுபவம் பெற்று மறுபுறம் 21 வயதான சீன வீரர். பெயர் யாகுவாகுவா. உடற்கல்விப் பயிற்சிப் பெறும் மாணவ. கிைய அவர் இளமை ததும்பும் உடற்கட்டுக் கொண்டவர்.