பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா

91

வந்த இட்லர், தான் உட்கார்ந்து பார்க்கும் இடத்தை அந்தரங்க அறைக்கு மாற்றிக் கொண்டான்.

அதற்குப் பிறகும், அமெரிக்க வீரர்களின் ஆதிக்கமே இருந்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு யாருக்குமே பரிசளிக்க இட்லர் முன் வரவில்லை. ஒலிம்பிக் போட்டியில் ஒரு போட்டி நடந்து முடிந்தால், இட்லர் வெட்கப்பட்டுக் கொண்டு வேதனையுடன் வெளியே ஓடினான்.

இட்லர் ஓடிய ஓட்டத்தைப் பார்த்து, அங்கு அமர்ந்திருந்த விளையாட்டு ரசிகர்கள் மட்டும் நகைக்க வில்லை. உலகமே சிரித்தது. ஆமாம், இட்லரின் அகம் பாவம்தான் அவமானப்படுத்தி இட்லரை விரட்டியது.

இனவெறி இட்லரை ஓட வைத்தது. அந்த ஓட்டம்தான், அவனது அரசியல் வாழ்வின் வாட்டத்துக்கும் அடித்தளமாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. ஜெசி ஓவன்ஸ் ஒலிம்பிக் பந்தயத்திற்குள் வெற்றி வீரனாக ஓடினான். இட்லரும் ஓடினான். ஒலிம்பிக் போட்டியில் அல்ல—தன் கொள்கைப் போட்டியில் தலைகுனிந்த படி வெளியே ஓடினான். அதுவே வரலாறாக அமைந்து விட்டது.