பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா

95

பந்தயத்திற்குப் பிளாங்கர்ஸ் கோயன் வருகிறாள் என்றதும், பரிகாசம் பண்ணத் தொடங்கினார்கள் பத்திரிக்கையாளர்கள். '20 வயது கன்னியர்களுடன் போட்டி போட, இரண்டு குழந்தைகளின் தாயார் ஹாலந்து நாட்டிலிருந்து வருகிறாள்' என்று எழுதிய அவர்கள் எழுத்தில், கேலியும் கிண்டலும் கூத்தாடின. கும்மாளம் போட்டன.

'வாலிப நேரத்தில் வாய்ப்பு கிடைக்கப்பெறாத வனிதை' என்று அவர்கள் இரக்கப்படவில்லை. மாறாக 'ஏட்டிக்குப் போட்டி' என்ற வகையில் வரவேற்பு இருந்தது. உலக சாதனை பொறித்திருந்த அவளது உண்மையான ஆற்றலை மறைப்பது போல, அவளது வயது 30 என்பதையும் சுட்டிக்காட்டி, முன்போல ஆற்றல் இருக்காது என்பதையும் மறைமுகமாகக் கூறுவது போல, பத்திரிக்கையாளர்கள் செய்திகளைப் பரப்பினர், என்னதான் கூறினாலும், பிளாங்கர்ஸ் கோயனின் இதயம் சற்றும் கலங்கவில்லை.

போட்டிகள் தொடங்கின. 100 மீட்டர் ஓட்டத்தில் முதலாவதாகப் பங்கு பெற்று 11.9 வினாடிகளில் ஓடி, உலக சாதனையை நிறுவினாள். அடுத்த போட்டி 200 மீட்டர் ஓட்டம். அதிலும் 24.4 வினாடிகளில் ஓடி, மீண்டும் உலக சாதனையை நிறுவினாள். மூன்றாவது போட்டி 80 மீட்டர் தடை தாண்டி ஓட்டம். அதிலும் 11.2 வினாடிகளில் ஓடி உலக சாதனை. இவ்வாறாக பங்கு பெற்ற மூன்று பந்தயங்களிலும் தங்கப் பதக்கம் பெற்றதோடு அல்லாமல், பார் புகழும் வண்ணம் உலக சாதனை நிகழ்த்தினாள்.

அத்துடன் அமையாது, 4<100 மீட்டர் தொட ரோடடப் போட்டியிலும் கலந்து கொண்டு, ஒரு தங்கப் பதக்கம் பெற்றாள். நல்ல குடும்பத் தலைவி ஒருத்தி