பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்
98
 

39. பெண்களே போய்விடுங்கள்!

'பெண்களே போய் விடுங்கள்! விளையாட்டுப் பக்கமே வராதீர்கள்! வந்தால் பயங்கர தண்டனைக்கு ஆளாவீர்கள்' என்று விளையாட்டுக்களை ஆரம்பித்த கிரேக்கர்கள் முதல், இன்று விதண்டாவாதம் பேசும் முறைகெட்டவர்கள் வரை விரட்டித்தான் பார்க்கிறார்கள்.

அணைபோடப்போட அடங்காது குதிக்கின்ற வெள்ளம்போல, அவர்களை விரட்ட விரட்ட, அவர்கள் விளையாட்டில் பங்குபெறும் எண்ணிக்கையும், ஆதிக்கமுமே இன்று அதிகரித்துக்கொண்டு வருகிறது.

பழங்கால கிரேக்கத்தில் நடந்த ஒலிம்பிக் பந்தயங்களில், ஆண்கள் மட்டுமே போட்டிகளில் கலந்துகொண்டனர். அவர்கள் பிறந்தமேனியர்களாக போட்டியிட்டதன் காரணமோ அல்லது பெண்களுக்கு விளையாட்டுக்கள் தேவையில்லை என்று எண்ணினார்களோ என்னவோ, பெண்களை ஒலிம்பிக் மைதானம் நடத்தும் பக்கமே தலைகாட்ட விடவில்லை.

விதிகளை மீறி பந்தயம் பார்க்க வந்தவர்களுக்கு மரண தண்டனையே விதிக்கப்பட்டது. அதையும் அலட்சியம் செய்துவிட்டு, பார்க்க வந்த பிரனிஸ் என்ற தாய் நடத்திய போராட்டத்தால், இந்த விதிமுறை சற்று தளர்ந்தது. அதன் பிறகு, பந்தயங்களில் பெண்களும் கலந்து கொள்கின்ற வாய்ப்பும் உரிமையும் கிடைத்தது.

புதிதாக ஒலிம்பிக் பந்தயங்களை அரம்பித்த பொழுது, அதன் பிறகு, பந்தயங்களில் பெண்களும் கலந்துகொள்கின்ற வாய்ப்பும் உரிமையும் கிடைத்தது. புதிதாக ஒலிம்பிக் பந்தயங்களை ஆரம்பித்த பொழுது, பெண்களுக்கும் அதே கதிதான் நேர்ந்தது. பெண்களுக்கென்று போட்டிகள்