பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



13

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பெற்றிருக்கும் ஃபோர்டிடம் கையெழுத்து வாங்க முயற்சிக்காது. விளையாட்டு வீரரிடம் கையெழுத்து வாங்கவிரும்பியதைப் பார்த்துப் ஃபோர்டு சொன்னார்.

'இங்கே யாருக்குப் புகழ் அதிகம் என்று பார்த்தீர்களா? எங்களுக்குத்தான் என்று பீலியைப் பார்த்து பெருமையாகக் கூறினார் ஃபோர்டு. தான் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டாலும் உண்மையையும் மக்கள் உணர்வையும் மதித்த ஃபோர்டின் பெருந்தன்மைதான் என்னே?

பிரேசில் நாட்டிலே குக்கிராமம் ஒன்றில் அழுக்கடைந்த சந்துகளில் பந்தை உதைத்து ஆடத்தொடங்கிய நீக்ரோவான வீரர் பீலி, அமெரிக்க நாட்டு அரசியல் தலைவரையும் புகழில் மிஞ்சிய புகழ் வாய்ந்த விளையாட்டு வீரனாய் உயர்ந்தார்.

விளையாட்டு யாரையும் வீணாக்கியதில்லை. உண்மைதான்.

விளையாட்டை வீழ்த்திவிட்டு வாழ்ந்த நாடும் இல்லை
விளையாட்டை வாழ்த்திவிட்டு தாழ்ந்த நாடும் இல்லை.